சேனல் பெயர் மற்றும் பல தொலைக்காட்சி செய்திகள்

விஜய் டிவி

விஜய் டிவி நிகழ்ச்சிகள்

காற்றின் மொழி சீரியல் விஜய் டிவி – இரவு 9.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்

அக்டோபர் 07 முதல் இரவு 9.30 மணிக்கு சீரியல் காற்றின் மொழிவிஜய் டிவி அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய காதல் கலந்த குடும்ப நெடுந்தொடர் காற்றின் மொழி. இத்தொடர் அக்டோபர் 07 முதல் இரவு 9.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்.தாழம்பூ சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு, விஜய் டிவிகதை கண்மணி பிறவு ஊமை. அவள் பிறந்தது குடும்பத்திற்கு துரதிஷ்டம் என்று ஜோதிடர் சொன்னதை வைத்து அவளை அவள் பாட்டி மற்றும் குடும்பத்தினர் அவளை வீட்டில் இருந்து விளக்கி வைக்கின்றனர். கண்மணிக்கு அவள் அப்பா என்றால் கொள்ளை பிரியம்.நடிகர்கள் சந்தோஷ் (சஞ்சீவ்), கண்மணி (பிரியங்கா), சுப்பு (மனோகர்),…

தாழம்பூ சீரியல் விஜய் டிவி – திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு

தாழம்பூ அக்டோபர் 07 முதல் இரவு 10 மணிக்கு விஜய் டிவி அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய மெகா தொடர் தாழம்பூ. கற்பனைக்கும் புதிய முயற்சிகளுக்கும் பெயர் போன விஜய் டிவி, மகுடங்களுக்கு மகுடமாக தாழம்பூ என்ற புதிய தொடரை நேயர்களுக்காக வழங்குகிறது. இது வரும் அக்கோபர் 07 தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும்.கதைச்சுருக்கம் நாகலோகம் பாம்புகளின் உலகம். அவர்களின் தலைவர் நாகயோகி. வாசுகி அவரின் மகள். நாகா நாகலோகத்தின் இளம் போர்வீரன். வாசுகியும் நாகாவும் நிச்சயம் ஆனவர்கள். அவர்களது பொக்கிஷமான ஆத்மலிங்கம் நாகலோகத்தில் இருந்து தொலைந்து விடுகிறது. ஆத்மலிங்கம் இல்லையென்றால்…

தேன்மொழி திங்கள் முதல் சனி வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகும்

விஜய் டிவி தேன்மொழி விஜய் தொலைக்காட்சி மேலும் ஒரு புத்தம் புதிய தொடர்கதையை தொடங்கியுள்ளது. தேன்மொழி, என்னும் இந்த புத்தம் புதிய மெகாத்தொடர், திங்கள் முதல் சனி வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகும். ஒரு அழகிய கிராமத்தில் வாழும் தேன் மொழி, ஒரு சுட்டித்தனமான கவலைகள் ஏதும் வைத்து கொள்ளாத ஒரு பெண்.நடிகர்கள் அப்பாவின் அளவுக்கடங்காத பாசத்தை கொண்ட தேன் மொழி சூழ்நிலைகள் காரணமாக கிராமத்து பஞ்சாயத்தில் தலைவர் போட்டிக்கு நிற்கிறார் தேன் மொழிக்கு அருள் என்னும் ஒரு அரசியல் சார்ந்த பணக்கார வீட்டு பையன் மீது காதல் ஆசை ஏற்படுகிறது, அவனுக்கும் தன் மீது காதல் இருப்பதாக நினைத்து கொள்கிறார். தேன் மொழி…

சுந்தரி நீயும் சுந்தரி நானும் விஜய் டிவி சீரியல் – திங்கள் முதல் சனி வரை, மதியம் 1 மணிக்கு

சுந்தரி நீயும் சுந்தரி நானும் விஜய் தொலைக்காட்சியில் மற்றும் ஓர் புதிய குடும்பத்தொடர் தொடங்கவுள்ளது- ஆயுத எழுத்து. இது வரும் ஜூலை 22 முதல் திங்கள் முதல் சனி வரை, மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இந்த கதையில் ரத்த பாந்தமான இரு குடும்பம் சில பிரச்சனைகள் காரணமாக பிரிந்து வாழ்கின்றனர் தமிழரசி கனிவான இதயம் கொண்ட சராசரி நடுத்தர வீட்டுப்பெண் , இவருடன் தாய், தாத்தா, மற்றும் இரண்டு தங்கைகள் இருக்கின்றனர். ஒரு அனாதை இல்லம் நடத்திவருகின்றனர். பணத்தால் மிகுந்தவராக இல்லாவிட்டாலும் மனதால் மிகுந்த குடும்பம். இவர்களின் தந்தை இறப்பை பற்றி அறியாதவர்கள்.நடிகர்கள் மற்றொரு பக்கம் வேல்முருகன் ஒரு பணக்கார…

ஆயுத எழுத்து ஜூலை 15 முதல் திங்கள் முதல் சனி வரை, இரவு 7 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில்

திங்கள் முதல் சனி வரை, இரவு 7 மணிக்கு - ஆயுத எழுத்து விஜய் தொலைக்காட்சியில் மற்றும் ஓர் புதிய குடும்பத்தொடர் தொடங்கவுள்ளது- ஆயுத எழுத்து. இது வரும் ஜூலை 15 முதல் திங்கள் முதல் சனி வரை, இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. ஒரு கிராமத்தில் கம்பீரமாக வாழும் பெண் காளியம்மாள் , இவருக்கு படிப்பறிவின் மேல் மிகுந்த நம்பிக்கை இல்லை, மேலும் அந்த கிராமத்திற்கு தான் செய்வது தான் நலம் என்று எண்ணுபவர். அரசு அதிகாரிகளின் மீது நம்பிக்கை இல்லாதவர். வெளி ஆட்கள் மீதும் பெருசாக அபிப்ராயம் இல்லாதவர். இவருக்கு மாறாக இந்திரா என்னும் படித்த தைரியமான பெண் சப் காலெக்டராக அந்த க்ராமத்தினுள் வருகிறார்.கதை அந்த…

பிக் பாஸ் 3 ஆரம்பம் 23 June 2019 – இது வெறும் ஷோ அல்ல நம்ம லைப்

பிக் பாஸ் 3 திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது தமிழ் நாட்டின் மிக பிரபலமான பொழுதுபோக்கு தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சி. இதுவரை எப்பொழுதும் புதிதான நிகழ்ச்சிகளை வழங்கிவரும் விஜய், பொழுதுபோக்கின் உச்சகட்டமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் தொடங்கிவைத்தது.ஒவ்வொரு முறை பிக் பாஸ் ஷோ முடியும் போதும் அடுத்த பிக் பாஸ் ஷோவின் எதிர்பார்ப்பு நேயர்களிடையே அதிகரிக்க தொடங்கிவிடுகிறது. இந்த ஒரு ஷோவுக்கு மட்டும் சலிப்பே இல்லை என்பது உண்மை. ஏனென்றால் ஒவ்வொரு சீசனுக்கும் புதிய பரிமாணங்கள் உண்டு. புதிய முகங்கள், புதிய குணங்கள், புதிய பரிமாணங்கள் என்று ஏகப்பட்ட புதுமைகள் இதில்…

ஸ்டார்ட் மியூசிக் – ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது

விஜய் தொலைக்காட்சி - ஸ்டார்ட் மியூசிக் விஜய் தொலைக்காட்சி இதுவரை புதுமையான நிகழ்ச்சிகளை தமிழ் தொலைக்காட்சிக்கு கொண்டுவருகின்றது அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியாக ஸ்டார்ட் மியூசிக் என்னும் நிகழ்ச்சியை தொடங்கவுள்ளது இது வரும் மே 26 அன்று ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இசையை மையமாக கொண்டு கேளிக்கையும் கலந்து நடக்கப்படும் கேம் ஷோ தான் இந்த ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது நம் எல்லோருக்கும் பிடித்த தொகுப்பாளினி பிரியங்கா அவர்கள்.இந்த நிகழ்ச்சியில் கலகலப்பான நான்கு சுற்றுகளுள்ளன. இந்த நிகழ்ச்சியில் வாரந்தோறும் இரண்டு நட்சத்திர டீம்கள்…

Mr and Mrs. சின்னத்திரை இறுதிச்சுற்று – 19th May 2019 at 3.00 P.M

Mr and Mrs. சின்னத்திரை இறுதிச்சுற்றுவிஜய் தொலைக்காட்சி எப்பொழுதும் புதிய கான்சப்டுகளுடன் நிகழ்ச்சிகளை தொடங்கும். அப்படி அனைவருக்கும் பிடித்தமான ஒரு நிகழ்ச்சி Mr and Mrs. சின்னத்திரை.இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சுற்றும் வெவ்வேறுமாதிரி இருக்கும். இவை அனைத்தும் நம் நட்சத்திர ஜோடிகளின் திறமை, காதல், மன உறுதி ஆகியவற்றை வெளிப்படுத்தும் சுற்றுகளாக அமையும். இந்த நிகழ்ச்சி தற்பொழுது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்று போட்டியாளர்கள் மணிமேகலை – உசைன், நிஷா- ரியாஸ், சங்கரபாண்டியன் – ஜெயபாரதி, அந்தோணி தாசன் – ரீட்டா, திரவியம் – ரித்து, மற்றும் செந்தில் – ராஜலட்சுமி. இந்த…

என்கிட்ட மோதாதே 2 – மே 19 முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு

விஜய் தொலைக்காட்சி என்கிட்ட மோதாதே 2 விஜய் தொலைக்காட்சியின் மற்றும் ஒரு ஹிட் நிகழ்ச்சி - என்கிட்ட மோதாதே. இதன் இரண்டாவது சீசன் வருகிற மே 19 முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இனி உங்களுக்கு விருப்பமான தொடர்கதை நட்சத்திரங்கள் பிற தொடர்கதை நட்சத்திரங்களுடன் போட்டியிடுவதை காணலாம்.எல்லா வாரமும் நமது தொலைக்காட்சியின் இரண்டு தொடர்கதையிலிருந்து நட்சத்திரங்கள் குடும்பமாக வந்து போட்டியிடப்போகிறார்கள். ராஜா ராணி, மௌன ராகம், சின்னத்தம்பி, பாரதி கண்ணம்மா மற்றும் பல தொடர்களிலிருந்து போட்டியிடப்போகின்றன. இந்த வாரம் ஈரமான ரோஜாவே மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர்…

சூப்பர் சிங்கர் 7 – ஸ்டார் விஜய் பெருமையுடன் வழங்கும் சனி – ஞாயிறு இரவு 8 மணிக்கு

சூப்பர் சிங்கர் 7 தமிழ்நாட்டின் மிக பெரிய சிங்கிங் ரியாலிட்டி நிகழ்ச்சி சூப்பர் சிங்கர், இம்முறை இன்னும் பிரமாண்டமாக. வெற்றியாளர்களுக்கு லட்சங்கள் மதிப்புள்ள பரிசுகள் மட்டுமின்றி விலைமதிப்பில்லா ஒரு வாய்ப்பும் இம்முறை உண்டு. இந்நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பூட்ட, தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக பல ஹிட்களை கொடுக்கும் இளம் இசை அமைப்பாளரும் பாடகருமான அனிருத் ரவிச்சந்தர் அவர்களும் இணைகிறார்.இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பெரிய ஒரு வாய்ப்பாக இவர் முன் தனது திறமையை காட்டும் ஒரு அறிய வாய்ப்பாக இருக்கும் சமீபத்தில் வெளியான ப்ரோமோ பலராலும் பேசப்படுகிறது இதில் அனிருத் அவர்கள் தனது இசை…