ஸ்டார்ட் மியூசிக் – ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது

விஜய் தொலைக்காட்சி - ஸ்டார்ட் மியூசிக் விஜய் தொலைக்காட்சி இதுவரை புதுமையான நிகழ்ச்சிகளை தமிழ் தொலைக்காட்சிக்கு கொண்டுவருகின்றது அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியாக ஸ்டார்ட் மியூசிக் என்னும் நிகழ்ச்சியை தொடங்கவுள்ளது இது வரும் மே 26 அன்று ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இசையை மையமாக கொண்டு கேளிக்கையும் கலந்து நடக்கப்படும் கேம் ஷோ தான் இந்த ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது நம் எல்லோருக்கும் பிடித்த தொகுப்பாளினி பிரியங்கா அவர்கள்.இந்த நிகழ்ச்சியில் கலகலப்பான நான்கு சுற்றுகளுள்ளன. இந்த நிகழ்ச்சியில் வாரந்தோறும் இரண்டு நட்சத்திர டீம்கள்…

Mr and Mrs. சின்னத்திரை இறுதிச்சுற்று – 19th May 2019 at 3.00 P.M

Mr and Mrs. சின்னத்திரை இறுதிச்சுற்றுவிஜய் தொலைக்காட்சி எப்பொழுதும் புதிய கான்சப்டுகளுடன் நிகழ்ச்சிகளை தொடங்கும். அப்படி அனைவருக்கும் பிடித்தமான ஒரு நிகழ்ச்சி Mr and Mrs. சின்னத்திரை.இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சுற்றும் வெவ்வேறுமாதிரி இருக்கும். இவை அனைத்தும் நம் நட்சத்திர ஜோடிகளின் திறமை, காதல், மன உறுதி ஆகியவற்றை வெளிப்படுத்தும் சுற்றுகளாக அமையும். இந்த நிகழ்ச்சி தற்பொழுது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்று போட்டியாளர்கள் மணிமேகலை – உசைன், நிஷா- ரியாஸ், சங்கரபாண்டியன் – ஜெயபாரதி, அந்தோணி தாசன் – ரீட்டா, திரவியம் – ரித்து, மற்றும் செந்தில் – ராஜலட்சுமி. இந்த…

என்கிட்ட மோதாதே 2 – மே 19 முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு

விஜய் தொலைக்காட்சி என்கிட்ட மோதாதே 2 விஜய் தொலைக்காட்சியின் மற்றும் ஒரு ஹிட் நிகழ்ச்சி - என்கிட்ட மோதாதே. இதன் இரண்டாவது சீசன் வருகிற மே 19 முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இனி உங்களுக்கு விருப்பமான தொடர்கதை நட்சத்திரங்கள் பிற தொடர்கதை நட்சத்திரங்களுடன் போட்டியிடுவதை காணலாம்.எல்லா வாரமும் நமது தொலைக்காட்சியின் இரண்டு தொடர்கதையிலிருந்து நட்சத்திரங்கள் குடும்பமாக வந்து போட்டியிடப்போகிறார்கள். ராஜா ராணி, மௌன ராகம், சின்னத்தம்பி, பாரதி கண்ணம்மா மற்றும் பல தொடர்களிலிருந்து போட்டியிடப்போகின்றன. இந்த வாரம் ஈரமான ரோஜாவே மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர்…

சூப்பர் சிங்கர் 7 – ஸ்டார் விஜய் பெருமையுடன் வழங்கும் சனி – ஞாயிறு இரவு 8 மணிக்கு

சூப்பர் சிங்கர் 7 தமிழ்நாட்டின் மிக பெரிய சிங்கிங் ரியாலிட்டி நிகழ்ச்சி சூப்பர் சிங்கர், இம்முறை இன்னும் பிரமாண்டமாக. வெற்றியாளர்களுக்கு லட்சங்கள் மதிப்புள்ள பரிசுகள் மட்டுமின்றி விலைமதிப்பில்லா ஒரு வாய்ப்பும் இம்முறை உண்டு. இந்நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பூட்ட, தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக பல ஹிட்களை கொடுக்கும் இளம் இசை அமைப்பாளரும் பாடகருமான அனிருத் ரவிச்சந்தர் அவர்களும் இணைகிறார்.இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பெரிய ஒரு வாய்ப்பாக இவர் முன் தனது திறமையை காட்டும் ஒரு அறிய வாய்ப்பாக இருக்கும் சமீபத்தில் வெளியான ப்ரோமோ பலராலும் பேசப்படுகிறது இதில் அனிருத் அவர்கள் தனது இசை…

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிச்சுற்று – நேரடி ஒளிப்பரப்பு மாலை 3.30 மணிக்கு

வரும் ஏப்ரல் 21 ஆம் நாள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது - சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிச்சுற்று மிக பிரபலமான, மற்றும் அனைவருக்கும் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் 6, இறுதி சுற்றை நெருங்கியுள்ளது வரும் ஏப்ரல் 21 ஆம் நாள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிப்பரப்பு மாலை 3.30 மணிக்கு அரம்பமாகும்.ஒரு விஷயத்தின் மீது நமக்கு ஏற்படும் காதல் லட்சியமாக மாறும், அப்படி இசை மீது காதல் கொண்டு அதை லட்சியமாகியவர்கள் பலர் உண்டு.சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதி போட்டியாளர்கள் அந்த…

விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் 5 – இந்த மாபெரும் விழாவை கூடிய விரைவில் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் 5 தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான நிகழ்வுகளில் ஒன்றான ‘விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ். தற்பொழுது புதுப்பொலிவுடன் 5வது விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் என ஏப்ரல் 6 சனிக்கிழமை அன்று EVP பிலிம் சிட்டியில், பிரமாண்டமாக அரங்கேறியுள்ளது.விஜய் தொலைக்காட்சி எப்பொழுதும் திறமைகளை கொண்டாட தவறியதேயில்லை. இந்த நிகழ்ச்சியின் மூலம் இதுபோன்ற தன் சின்னத்திரைக் கலைஞர்களை பாராட்டி பறைசாற்றியிருக்கிறது.இந்த நிகழ்ச்சியில் பல மதிப்புமிக்க விருதுகள் உள்ளன- சிறந்த நடிகர் -நடிகை, சிறந்த நடிகர், பேவரைட் குடும்பம், சிறந்த தொடர் போன்ற பல விருதுகள் வழங்கப்படவுள்ளன.வென்றவர்கள் இந்த…

பாண்டியன் ஸ்டோர்ஸ் – திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 10 மணிக்கு

Monday to Friday 10 pm on STAR VIJAY - பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் தொலைக்காட்சி பல தொடர் கதைகளை தொடங்கி வருகிறது. அப்படி ஒரு மாறுபட்ட தொடர் கதை பாண்டியன் ஸ்டோர்ஸ். இது திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிவருகிறது. இந்த தொடர் கதை நான்கு அண்ணன் தம்பியை சுற்றி அமையும். இவர்கள் குன்னக்குடியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இந்த குடும்பத்தின் மூத்த மருமகள் தனலட்சுமி. அனைவரையும் அன்பால் அரவணைப்பவர் இவர். தன் கணவரின் தம்பிகளை தன் பிள்ளைகள் போல் பார்த்துக்கொள்வார்.Story தற்பொழுது இந்த தொடர் கதையில் நடத்தவிடாமல் செய்ய மீனாவின் தந்தை ஜனார்த்தனன்…

பாரதி கண்ணம்மா – தொடர் வரும் பிப்ரவரி 25ம் தேதி, இரவு 8.30 மணிக்கு

திங்கள் முதல் இரவு 8.30 மணிக்கு விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா தொடர் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பும் பல வெற்றி தொடர்களைத் தொடர்ந்து மேலும் ஒரு புத்தம் புதிய மெகா தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. இந்தத் தொடர் வரும் பிப்ரவரி 25ம் தேதி, இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகிறது. பாரதி கண்ணம்மா என்ற இந்த தொடர் நிச்சயம் நேயர்களின் கவனத்தை ஈர்க்கும் என்பது உறுதி.பாரதி கண்ணம்மா என்ற இந்தக்கதையியல் கண்ணம்மா என்ற இளம் பெண் நல்ல குணம் உள்ளம் கொண்ட, அனைவருக்கும் உதவும் குணம் கொண்ட பெண்ணாகும். இவள் சற்று கருத்த நிறம் உள்ளவள் என்பதால் சமுதாயத்தில் சில விமர்சனங்களை சந்திக்கிறாள்.கண்ணம்மாவுக்கு அஞ்சலி என்ற…

Mr and Mrs. சின்னத்திரை – ஜனவரி 20 முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும், 6.30 PM மணிக்கு

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி - Mr and Mrs. சின்னத்திரைMr and Mrs. சின்னத்திரை விஜய் தொலைக்காட்சியில் முற்றிலும் பல புதிய நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளது. இதுவரையில் நமது சின்னத்திரை நடிகர் நடிகைகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை மிக அழகாக செய்திருப்பதை கண்டிருக்கிறோம். ஆனால் திரைக்கு பின்னால் அவர்கள் எவ்வளவு திறமை, காதல், அன்பு என்பதை இந்த நிகழ்ச்சியில் தான் காண்போம். இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி 20 முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும், 6.30 PM மணிக்கு ஒளிபரப்பாகிறது.இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சுற்றும் வெவ்வேறுமாதிரி இருக்கும். இவை அனைத்தும் நம் நட்சத்திர ஜோடிகளின் திறமைகள் காதல் மன…

சிவா மனசுல சக்தி – விஜய் தொலைக்காட்சி தொடர் வரும் ஜனவரி 21 முதல்

திங்கள் முதல் சனி வரை, மாலை 6 மணிக்கு - சிவா மனசுல சக்திவிஜய் தொலைக்காட்சி பல தொடர் கதைகளை தொடங்கி வருகிறது. அப்படி மற்றொரு மாறுபட்ட தொடர் கதையாக வருகிறது சிவா மனசுல சக்தி. இது வரும் ஜனவரி 21 முதல், திங்கள் முதல் சனி வரை, மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.இந்த தொடரில் சிவா மற்றும் சக்தி என்னும் மாறுபட்ட கோணங்களுடைய இருவர் எப்படி சந்தித்து அவர்கள் பயணம் மாறுகின்றது என்பது பற்றியது. கதை சிவா அதீத கடவுள் நம்பிக்கை உடையவர், சந்தோஷத்திற்கான வழி விதிமுறைகளை கடைபிடிப்பது தான், மேலும் சந்தோஷத்திற்கான வழி விதிமுறைகளை கடைபிடிப்பது தான் என்று நம்புபவர். மறுபுறம் சக்தி அன்பும் காதலும் பெரிதாக பெறாத…